சமூகநீதி துறையில் புதிய அறிவிப்புகள்: அமைச்சர் வன்னி அரசு

தமிழ்நாடு சட்டபேரவையில் சமூகநீதித் துறை சார்ந்து பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இன்று சமூக நீதித்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடக்கிறது. முன்னதாக கேள்வி நேரம் ஒதுக்கப்பட்டது. அப்போது பொதுப்பணி, மருத்துவம், உணவு உள்ளிட்ட துறைகள் சார்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்புனர். இதற்கு அந்தந்த துறை அமைச்சர்கள் பதிலளித்தனர்.

இதனைத்தொடர்ந்து, நேபாள வெள்ளப்பெருக்கில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பது குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதற்கு அமைச்சர் ராஜ்மோகன் பதிலளித்து பேசினார்.

இதனைத்தொடர்ந்தி சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, சமூகநீதித்துறை சார்ந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி அவர் அறிவித்ததாவது,

விடுதி மாணாக்கருக்கு மாதாந்திர உணவுக் கட்டணம் உயர்வு
தரமான, சத்தான உணவு வழங்க பள்ளி விடுதி மாணாக்கருக்கு மாதம் ஒன்றுக்கு வழங்கப்பட்டு வரும் ரூ. 1400-ல் இருந்து ரூ.1800 ஆகவும். கல்லூரி விடுதி மாணாக்கருக்கு ரூ.1500-ல் இருந்து ரூ.2000 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும். இத்திட்டத்திற்காக, ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

சமூக நீதி விடுதி பராமரிப்பு தொகை உயர்வு
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணாக்கர் தங்கும் பள்ளி விடுதிகளின் ஆண்டு பராமரிப்பு தொகை ரூ.50,000-லிருந்து ரூ.75,000-ஆகவும், கல்லூரி விடுதி பராமரிப்பு தொகை ரூ.50,000-லிருந்து ரூ.1 இலட்சமாகவும் உயர்த்தப்படும்.

வருடாந்திர பராமரிப்பு தொகை உயர்வு
பள்ளிகளின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளிகளுக்கான வருடாந்திர பராமரிப்பு தொகை உயர்த்தி வழங்கப்படும்.
இத்திட்டத்திற்காக, ரூ.6.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

சமூக நீதி 150 வீடுக்கள்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர் படிப்பதற்கு உகந்த சூழ்நிலையை உருவாக்கும் பொருட்டு 150 சமூக நீதி விடுதிகள் ரூ.160 கோடியில் கட்டப்படும்.

100 சமுதாயக் கூடங்கள்
ஆதிதிராவிடர் மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில், சமுதாய நிகழ்வுகளை மேற்கொள்ள ஏதுவாக 100 சமுதாயக்கூடங்கள் கட்டப்படும்.

புவிசார் குறியீடு
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் விளைபொருட்களின் தனித்தன்மையை பேணிப்பாதுகாக்கும் பொருட்டு புவிசார் குறியீடு பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

தூய்மைப்பணியாளர் குடும்ப வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டம்
தூய்மைப்பணியாளரின் குடும்ப உறுப்பினர்களை தொழில் முனைவோராக மாற்றுவதற்கு “ஏற்றம்” – தூய்மைப்பணியாளர் குடும்ப வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டம் உருவாக்கப்பட்டு, வங்கி கடனுடன் 20 சதவீத மானிய உதவி வழங்கப்படும். இத்திட்டம், ரூ.50 கோடி கோடியில் நடைமுறைப்படுத்தப்படும்.

உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அமைச்சர் வன்னி அரசு வெளியிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.