ஒலிம்பிக் போட்டி முக்கியச் செய்திகள் விளையாட்டு

பாராலிம்பிக் தொடக்க விழாவில் மாரியப்பன் தங்கவேலு பங்கேற்கமாட்டார் என அறிவிப்பு

பாராலிம்பிக் தொடக்கவிழாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

உலகின் மாபெரும் விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் முடிந்தவுடன் மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நடத்தப்படும். அதன்படி டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் சமீபத்தில் நடந்து முடிந்தன. இதனைத் தொடர்ந்து இன்று பாராலிம்பிக் போட்டிகள் தொடங்குகின்றன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இன்று தொடங்கி செப்டம்பர் 5ம் தேதி வரை நடைபெறும் பாராலிம்பிக்கில் 163 நாடுகளைச் சேர்ந்த 4 ஆயிரத்து 537 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் 54 வீரர்கள் பங்கேற்கும் நிலையில், இன்று மாலை 4.30 மணிக்கு தொடக்கவிழா நிகழ்ச்சி நடைபெறுகிறது.

கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற ரியோ பாராலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு தொடக்க விழாவின் போது மூவர்ணக் கொடியை ஏந்திச்செல்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது அவருக்கு பதிலாக ஈட்டி எறிதல் வீரர் தேக் சந்த், இந்தியக் கொடியை ஏந்திச் செல்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாரியப்பன் தங்கவேலுவுடன் விமானத்தில் பயணித்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மாரியப்பன் தங்கவேலுவுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் அவருக்கு தொற்று இல்லை என முடிவுகள் வந்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொடக்க விழாவில் பங்கேற்கவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், அவருக்கு பதிலாக தேக் சந்த், மூவர்ண கொடியை ஏந்திச் செல்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“யாதும் ஊரே யாவரும் கேளீர்”….தமிழ் மொழியின் பெருமை கூறி நெகிழ்ந்த திரௌபதி முர்மு

Web Editor

அனைத்துக் கோயில்களிலும் அன்னதானம்: அமைச்சர் சேகர்பாபு

EZHILARASAN D

புதுமைப்பெண் திட்டத்தால் தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி அதிகரிக்கும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Dinesh A