ஆப்கனில் 1 கோடி குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறி

ஆப்கானிஸ்தானில் 1 கோடி குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாக யுனிசெப் அதிர்ச்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.    ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதையடுத்து அங்கு உச்சகட்ட பதற்றம் நிலவி வருகிறது. அங்குள்ளவர்கள் வேறு நாட்டிற்கு செல்ல…

ஆப்கானிஸ்தானில் 1 கோடி குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாக யுனிசெப் அதிர்ச்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. 

 

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதையடுத்து அங்கு உச்சகட்ட பதற்றம் நிலவி வருகிறது. அங்குள்ளவர்கள் வேறு நாட்டிற்கு செல்ல காபூல் விமான நிலையத்தில் குவிந்த காட்சிகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தின.

தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதால் அங்கு, பெண்கள், குழந்தைகளின் எதிர்காலம் குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளதாக உலக நாடுகளின் தலைவர்கள் கவலை தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் சுமார் ஒரு கோடி குழந்தைகளுக்கு மருத்துவம், உணவு உள்ளிட்ட அடிப்படை உதவிகள் தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் யுனிசெப் அதிர்ச்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. 10 லட்சம் குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உரிய சிகிச்சை அளிக்காவிட்டால் இன்னும் ஓராண்டுக்குள் உயிரிழக்க நேரிடும் எனவும் யுனிசெப் தெரிவித்துள்ளது.

42 லட்சம் சிறுவர்கள் பள்ளிப்படிப்பை நிறுத்தியுள்ளதாகவும் அதில் 22 லட்சம் பேர் பெண்கள் எனவும் யுனிசெப் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு உதவ முன்வரும் அமைப்புகளை தலிபான்கள் தடுக்கக் கூடாது என யுனிசெப் வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.