முக்கியச் செய்திகள் கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 25,467 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 25,467 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா 2ஆம் அலையின் பாதிப்பு தொடர்ச்சியாக குறைந்துகொண்டே வருகிறது. 3ஆம் அலையை எதிர்கொள்ள மத்திய – மாநில அரசுகள் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தயாராகி வருகின்றன. அதேபோல கொரோனா தடுப்பூசி போடும் பணியும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் மத்திய சுகாதாரத் துறை இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 25,467 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 3,24,74,773 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 39,486 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை 3,17,20,112 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 354 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை 4,35,110 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 63,85,298 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டோரின் எண்ணிக்கை 58,89,97,805 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement:
SHARE

Related posts

இந்திய பாரம்பரியத்துக்கு ‘மதச்சார்பின்மைதான்’ அச்சுறுத்தல் யோகி ஆதித்யநாத்

Jeba Arul Robinson

உள்ளாட்சித் தேர்தல் நியாயமான முறையில் நடைபெறுமா? எஸ்.பி.வேலுமணி சந்தேகம்

Ezhilarasan

“உங்கள் ஊழல் விளையாட்டு தொடராது” – மமதாகவுக்கு பிரதமர் எச்சரிக்கை!

Ezhilarasan