பொதுத்தேர்வு முடிவுகள் – தேதி மாற்றம்

10 மற்றும் +2 மாணவர்களுக்கு ஒரே நாளில் தேர்வு முடிவு வெளியாகும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. 2021-22-ஆம் கல்வியாண்டுக்கான 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மே மாதம் நடத்தப்பட்டது. இந்த தேர்வைத்…

10 மற்றும் +2 மாணவர்களுக்கு ஒரே நாளில் தேர்வு முடிவு வெளியாகும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

2021-22-ஆம் கல்வியாண்டுக்கான 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மே மாதம் நடத்தப்பட்டது. இந்த தேர்வைத் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சுமார் 9 லட்சம் மாணவர்கள் எழுதினர். இந்த தேர்வின் விடைத்தாள்களைத் திருத்தும் பணி கடந்த 1-ஆம் தேதி தொடங்கி 9-ஆம் தேதி நிறைவுபெற்றது. அதனைத்தொடர்ந்து, திருத்திய மதிப்பெண்களைப் பட்டியலிட்டு, தேர்வுத்துறை அதிகாரிகள் சரிபார்த்து, தேர்வுத்துறையின் இணையதளங்களில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில், அந்த பணிகள் முடிவடைந்து பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

https://twitter.com/news7tamil/status/1537332687710863360

ஆனால், தற்போது தேர்வு முடிவுகளின் தேதி மாற்றப்பட்டுள்ளது. 10 மற்றும் +2 மாணவர்களுக்கு ஒரே நாளில் தேர்வு முடிவு வெளியாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால், 10-ஆம் வகுப்பு முடிவுகள் வெளியாகுவது தள்ளிப்போகிறது. ஆனால், +2 மாணவர்களின் தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியாகிறது.

அண்மைச் செய்தி: ‘அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்குத் தடை?; வழக்கை நிராகரிக்கக் கோரி ஓ.பி.எஸ், இ.பி.எஸ் மனுத் தாக்கல்’

இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், +2 மாணவர்களுக்கு 20.06.2022 அன்று காலை 9.30 மணிக்கும், 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 20.06.2022 அன்று மதியம் 12.00 மணிக்கும் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த தேர்வு முடிவுகளை http://www.tnresults.nic.in, http://www.dgr1.tn.nic.in, http://www.dge2.tn.nic.in, http://www.dge.tn.gov.in என்ற இணையதளங்களின் வழியாகத் தெரிந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பள்ளிகளில் கொடுத்துள்ள எண்களுக்குக் குறுஞ்செய்தியாகவும் தேர்வு முடிவுகள் தெரிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் வெளியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.