4 மாதங்களுக்கு பின் பள்ளிக்கு திரும்பிய ஆசிரியர்கள்

சென்னையில், 4 மாத காலத்துக்குப் பின், அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் இன்று பணிக்கு திரும்பினர். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வருவதில் இருந்து விலக்கு…

சென்னையில், 4 மாத காலத்துக்குப் பின், அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் இன்று பணிக்கு திரும்பினர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்க்ப்பட்டிருந்தது. தற்போது 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விரைவில் நேரடி வகுப்புகள் தொடங்க ஆலோசித்து வரும் நிலையில், பள்ளி வளாகம், வகுப்பறைகளை தயார் செய்தல், கற்றல் – கற்பித்தல் பணிகளை தீவிரப்படுத்துதல் போன்ற பணிகளை ஆசிரியர்கள் மேற்கொள்ள உள்ளனர்.

இதற்காக 4 மாத காலத்துக்குப் பின், அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் இன்று பள்ளிகளுக்கு திரும்பினர். வரும் 6ம் தேதி முதல் வாட்ஸ் அப் வழியாக அலகுத் தேர்வு நடத்தப்பட உள்ள நிலையில், அதற்கான பணிகளையும் ஆசிரியர்கள் மேற்கொள்ள உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.