பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட 5 பேர் கைது

ஈரோட்டில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை வழிமறித்து 7 சவரன் தாலி செயின் பறித்த சம்பவத்தில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். மொடக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த கவிதா என்பவர் ரேஷன் கடையில் பணியாற்றி…

ஈரோட்டில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை வழிமறித்து 7 சவரன் தாலி செயின் பறித்த சம்பவத்தில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

மொடக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த கவிதா என்பவர் ரேஷன் கடையில் பணியாற்றி வருகிறார். கடந்த 26ஆம் தேதி பணி முடித்துவிட்டு வீடு திரும்பியபோது, இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த 5 பேர் கவிதாவை வழிமறித்து 7 சவரன் தாலிச் செயினை பறித்து சென்றுள்ளனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், வழக்கில் தொடர்புடைய மணிகண்டன், தினகரன், முகமது அன்சாரி, வெள்ளையன், பிரவீன் குமார் ஆகியோரை கைது செய்தனர். மேலும், கைதானவர்களிடம் இருந்து தாலிச் செயின் மற்றும் இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.