பெட்ரோல், டீசல் மீதான வரி குறைப்பு; ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம்

பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க இயலாது என தமிழ்நாடு அரசு கூறுவது நியாயமற்றது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் வரி குறைப்பை…

பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க இயலாது என தமிழ்நாடு அரசு கூறுவது நியாயமற்றது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் வரி குறைப்பை பின்பற்றி காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் உட்பட 25 மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

https://twitter.com/OfficeOfOPS/status/1462630994087870465

தமிழ்நாட்டில் வரியை குறைப்பதற்கான சாத்தியம் இல்லை என நிதியமைச்சர் அறிவித்திருப்பது வேதனைக்குரியது என தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், வாக்குறுதியே அளிக்காத பெரும்பாலான மாநிலங்கள் வரியை குறைத்திருக்கும்போது தமிழ்நாடு அரசு மட்டும் இயலாது என கூறுவது நியாயமற்றது என குறிப்பிட்டுள்ளார்.

அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் அமைந்துள்ளதாக விமர்சித்த ஓ.பன்னீர்செல்வம், மக்களை ஏய்த்துவிடலாம் என நினைக்காதீர்கள் என்றும் வெண்ணெய் எது, சுண்ணாம்பு எது, என மக்கள் நன்கறிவர் எனவும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.