முக்கியச் செய்திகள் விளையாட்டு

2022 ஐபிஎல்: டைட்டில் ஸ்பான்சரை கைப்பற்றியது டாடா குழுமம்

நடப்பாண்டு ஐபிஎல் போட்டியின் டைட்டில் ஸ்பான்சரை டாடா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் கடந்த 2008 முதல் ஆண்டு தோறும் 20 ஓவர்கள் கொண்ட டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. கடந்த 2020ல் இப்போட்டியின் ஸ்பான்சரை டீரிம் 11 நிறுவனம் கைப்பற்றியிருந்தது. இதனையடுத்து கடந்த 2021ம் ஆண்டு ஸ்பான்சரை விவோ பெற்றிருந்தது.

இந்நிலையில் நடப்பாண்டும் இதே நிறுவனம் ஸ்பான்சராக நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டாடா நிறுவனம் முதன்மை ஸ்பான்சராக இருக்கும் என ஐபிஎல் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனெவே கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சீன நிறுவனம் டைட்டில் ஸ்பான்சராக இருந்த நிலையில், பல்வேறு சர்ச்சைகள் மேலெழுந்தன. குறிப்பாக சுயார்ப்பு இந்தியா குறித்து மத்திய அரசு தெரிவித்த கருத்துகள், இந்திய-சீன ராணுவ வீரர்களிடையேயான மோதல் போன்றவை இந்த சர்ச்சைக்கு முக்கிய காரணமாக இருந்தன.

இதனையடுத்து அடுத்தடுத்து நடைபெறும் பொட்டிகளில் சீன நிறுவனமான விவோ தொடருமா என எதிர்பார்ப்புகள் இருந்தன. இந்நிலையில், 2022ம் ஆண்டிற்கான ஐபிஎல் ஸ்பான்சர்ஷிப்பை டாடா குழுமம் கைப்பற்றியுள்ளதாக ஐபிஎல் தலைவர் பிரிஜேஸ் படேல் தெரிவித்துள்ளார்.

விவோ நிறுவனத்திற்கான ஒப்பந்தம் முடிய 2 ஆண்டுகள் இருக்கும் நிலையில், டாடா நிறுவனமே முதன்மை ஸ்பான்சராக இருக்கும் என பிரிஜேஸ் தெரிவித்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டிற்கு எதிரான நிலைப்பாட்டை பிரதமர் மோடி மேற்கொள்ள மாட்டார்: திருமாவளவன்

Vandhana

“சங்கராச்சாரியார் சிலையை வடிவமைக்க நாளொன்றுக்கு 14-15 மணி நேரங்கள் உழைத்தோம்” – கர்நாடக சிற்பி

Halley Karthik

முடிவுக்கு வந்தது ‘இந்தியன் 2’ பஞ்சாயத்து: மீண்டும் தொடங்குகிறது ஷூட்டிங்!

Gayathri Venkatesan