முக்கியச் செய்திகள் சினிமா

டாக்டர் பட்டம் பெற்ற தமிழ் சினிமா பிரபலங்கள்

டாக்டர் பட்டம் பெற்ற தமிழ் சினிமா பிரபலங்கள் யார் யாரெல்லாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

1. எம்.ஜி.ஆர் – 1974 அரிசேனாவின் உலகப் பல்கலைக்கழகம்,
2. சிவாஜி – 1986 அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
3. கமல் – 2005 சத்யபாமா பல்கலைக்கழகம், 2019 – செஞ்சூரியன் பல்கலைக்கழக,
4. விஜயகாந்த் – 2011 ப்ளோரிடா சர்வதேச சர்ச் மேனேஜ்மெண்ட் நிறுவனம்,
5. விக்ரம் – 2011 இத்தாலியில் யூனிவர்சிட்டா போபோலே டெக்ஷீஸ் ஸ்டுடிம் மிலானோவான் பல்கலைக்கழகம்,
6. விஜய் – 2007 எம்ஜிஆர் பல்கலைக்கழகம்,
7. சின்னி ஜெயந்த்- 2013 சர்வதேச மாற்று மருத்துவப் பல்கலைக்கழகம்,
8. நடிகர் நாசர் – 2016 வேல்ஸ் பல்கலைக்கழகம்,
9. நடிகர் பிரபு – 2011 சத்யபாமா பல்கலைக்கழகம்,
10. நடிகர் விவேக் – 2015 சத்யபாமா பல்கலைக்கழகம்,
11. நடிகர் சார்லி – 2019 தமிழ்ப் பல்கலைக்கழகம். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு 2019- நடிகர் சார்லி ‘முனைவர்’ பட்டம் பெற்றார்.

இந்நிலையில், நடிப்பு, இயக்கம், பாடல் என பல்வேறு துறைகளில் நடிகர் சிம்பு சாதனைப் படைத்து வருவதால் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கவுள்ளதாக வேல்ஸ் பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. அதன்படி, சென்னை பல்லாவரத்தில் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 11-வது பட்டமளிப்பு விழா நடைப்பெற்றது.

இந்த நிகழ்ச்சியில் வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ் நடிகர் சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கினார். இந்நிலையில், வெந்து தணிந்தது காடு படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கனேஷ் என்பதால், அந்த படத்திற்கும் இந்த பட்டமளிப்பிற்கும் எந்த ச்மபந்தமும் இல்லை எனவும் ஐசரி தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியின்போது தடகள விளையாட்டு வீரர் மாரியப்பன், தொழிலதிபர் வி.ஜி. சந்தோஷம் ஆகியோருக்கும் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

இதுவரை டாக்டர் பட்டத்தை பெற்ற எம்.ஜி.ஆர், சிவாஜி, கமலஹாசன், நாசர், பிரபு, விஜயகாந்த், விவேக், விஜய் மற்றும் விக்ரம் ஆகிய தமிழ் திரையுலக பிரபலங்கள் வரிசையில் தற்போது சிலம்பரசன் டாக்டர் பட்டம் பெற்று இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை!

Saravana Kumar

நூற்றுக்கணக்கான சாதனைகளை அதிமுக அரசு செய்துள்ளது: முதல்வர் பழனிசாமி

Halley Karthik

நெசவாளர்களுக்கு தேவையான நூல் கிடைக்க நடவடிக்கை – ராஜேந்திர பாலாஜி!

Niruban Chakkaaravarthi