முக்கியச் செய்திகள் தமிழகம்

பழம்பெரும் தயாரிப்பாளர் எம்.முத்துராமன் காலமானார்

சிவாஜி, ரஜினி படங்களை தயாரித்த பழம்பெரும் தயாரிப்பாளர் எம்.முத்துராமன் இன்று காலை காலமானார்.

திரைப்படத் தயாரிப்பாளர் எம்.முத்துராமன் (83 வயது) இன்று காலை உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். ஜெமினி கணேசன் நடித்த ‘பேரப்பிள்ளை’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக எம்.முத்துராமன் அறிமுகம் ஆனார்.

அதனைத்தொடர்ந்து, ‘உங்க வீட்டுப் பிள்ளை’, ‘ராஜ மரியாதை’, ‘எடுப்பார் கைப்பிள்ளை’, ‘மூடு மந்திரம்’ ‘ஆயிரம் ஜென்மங்கள்’ உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்டப் படங்களைத் அவர் தயாரித்துள்ளார். இதில், ‘ராஜமரியாதை’ படத்தில் சிவாஜியும் கார்த்திக்கும் இணைந்து நடித்துள்ளனர். ‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.

இவர் தயாரித்த ‘நலந்தானா’ என்ற படத்தில்தான் நடிகர் பிரபு முதன்முறையாக நாயகனாக அறிமுகமானார். அதேபோல், இவரின் ‘ஒரு வீடு ஒரு உலகம்’ படம் தமிழக அரசின் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகிறனர்.

இன்று அதிகாலை 3.30 மணியளவில் எம்.முத்துராமன் காலமானார். இவருக்கு சுமங்கலி என்ற மனைவியும் அனு என்ற மகளும் உள்ளனர்.

Advertisement:
SHARE

Related posts

மூக்கணாங்கயிறை எதிர்த்து வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு. 

Ezhilarasan

கோயம்பேடு சந்தையில், மந்தமான கரும்பு விற்பனை: வியாபாரிகள் வேதனை

Arivazhagan CM

ஈழத்தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைக்கு திமுக வலியுறுத்தல்!

Gayathri Venkatesan