முக்கியச் செய்திகள் தமிழகம்

டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்: ஈபிஎஸ் வலியுறுத்தல்

கொரோனா நோய்த்தொற்று கட்டுக்குள் வரும் வரை டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 24 ஆயிரத்தைக் கடந்த நிலையில், டாஸ்மாக் கடைகளை திறப்பது என்ன நியாயம்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்களின் உயிரைக் காக்கும் பொறுப்பில் உள்ள திமுக அரசு, கஜானாவை நிரப்புவதிலேயே குறியாக இருப்பது கண்டனத்துக்குரியது என தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, ஆட்சிக்கு வரும் முன் ஒரு நிலைப்பாடு, வந்த பின் ஒரு நிலைப்பாடு என திமுக அரசு செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை உடனடியாக மூட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 2020 மே மாதம் தமிழகத்தில் கொரோனா தொற்றால் நாளொன்றுக்கு சுமார் 775 பேர் பாதிக்கப்பட்ட போது டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி ஸ்டாலின் வீட்டுக்கு முன் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தியதாகவும் ஆனால் தற்போது நாளொன்று கொரோனா பாதிப்பு 24,000 பேர் என உள்ள நிலையில் டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்திருப்பது என்ன நியாயம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

குறைந்தது தமிழகத்தில் சமையல் எண்ணெய் விலை; ரூ.10 வரை விலை குறைப்பு

Ezhilarasan

மதிமுக கடந்த தூரமும் கடக்க வேண்டிய பயணமும்

Arivazhagan CM

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் மத்திய குழுவினர் இன்று ஆய்வு

Halley Karthik