32.2 C
Chennai
September 25, 2023
முக்கியச் செய்திகள் விளையாட்டு

ஓய்வு பெறுகிறார் சானியா

ஆஸ்திரேலியன் ஓப்பன் டென்னிஸ் போட்டிகளில் விளையாடி வரும் சானியா மிர்சா, இந்த போட்டியுடன் தான் ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார். 

இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா 2003-ம் ஆண்டு முதல் இந்தியாவிற்காக விளையாடி வருகிறார். இதுவரை 6 கிராண்ட் சலாம் பட்டங்களை வென்ற சானியா மிர்சா, குழந்தை பிறப்புக்கு பிறகு ,2019-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் மீண்டும் விளையாடத் தொடங்கினார் .  14-வது ஆஸ்திரேலியன் ஓப்பன் டென்னிஸ் போட்டிகளில் கலந்துகொண்டிருக்கும் சானியா மிர்சா 19 வருடங்களாக விளையாடி வருகிறார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் ஆஸ்திரேலியன் ஓப்பன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் முதல் சுற்றில் கலந்துகொண்ட சானியா மிர்சா மற்றும் உக்ரையின் நாட்டைச் சேர்ந்த நாடியா கிச்நோக் தோல்வியை தழுவினர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சானியா மிர்சா ‘இனி நான் விளையாடப்போவதில்லை. இதற்கு சில காரணங்கள் இருக்கிறது. காயத்திலிருந்து முன்பைப்போல்  மீண்டு வர எனது உடல் ஒத்துழைக்கவில்லை. எனது உடல் அதன் வலுவை இழக்க தொடங்கியிருக்கிறது.

நான் எங்கு சென்றாலும் எனது மூன்று வயது மகனை உடன் அழைத்து செல்வதன் மூலம் அவனின் உடல் நிலை அபாயத்திற்குள்ளாக்குகிறேன். இந்த சீசன் முடியும் வரை நான் விளையாடுவேன். கடின உழைப்பால் எனது உடல் எடையை குறைத்து, இளம்தலைமுறை தாய்மார்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்திருக்கிறேன்.”என்று அவர் கூறினார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

அமெரிக்காவின் முன்னணி வங்கியான FIRST REPUBLIC திவால்; வாடிக்கையாளர் வைப்புத்தொகையில் $102 பில்லியன் இழப்பு!

Web Editor

நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் பிரபல நடிகையின் திருமணம் திடீர் நிறுத்தம்

Gayathri Venkatesan

சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்தார் பீகார் முதலமைச்சர் நிதிஷ்-பாஜக வெளிநடப்பு

Web Editor