கரூரில் குளிரூட்டப்பட்ட நவீன காவல் உதவி மையம்!

கரூரில், முதல் முறையாக குளிரூட்டப்பட்ட நவீன காவல் உதவி மையத்தை எஸ்.பி சுந்தரவதனன் துவக்கி வைத்தார். கரூர் பஸ் நிலையம் ரவுண்டான அருகே, போக்குவரத்து மற்றும் சட்ட ஒழுங்கைக் கண்காணிக்கும் வகையில், நகர காவல்…

கரூரில், முதல் முறையாக குளிரூட்டப்பட்ட நவீன காவல் உதவி மையத்தை எஸ்.பி சுந்தரவதனன் துவக்கி வைத்தார்.
கரூர் பஸ் நிலையம் ரவுண்டான அருகே, போக்குவரத்து மற்றும் சட்ட ஒழுங்கைக் கண்காணிக்கும் வகையில், நகர காவல் உதவி மையம் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட எஸ்.பி சுந்தரவதனம் இன்று துவக்கி வைத்தார்.
கோடை காலம் தொடங்கி உள்ளதால், வெயிலில் பணியாற்றும் போக்குவரத்து காவலர்களுக்கு, வெயிலைக் கட்டுப்படுத்தும் வகையில் சோலார் தொப்பிகளும், கைகளில் மாட்டும் உறைகளும் கொடுக்கப்பட்டுள்ளது.
இன்று தொடங்கி கோடை காலம் முடியும் வரை, போக்குவரத்து காவலர்களுக்கு
நான்கு வேலைகளும் மோர்  வழங்கப்படும் எனவும் சோலார் மூலம் இயங்கும் ஒளிரும் சாலை தடுப்பான்கள் கரூர் மாவட்ட எல்லைகளில் அமைக்கப்படும் எனவும் எஸ்.பி தெரிவித்தார்.
மேலும் அவர், சென்ற வருடத்தை விட இந்த வருடம் விபத்தினால் ஏற்படும் மரணங்கள் சற்று குறைந்துள்ளதாகவும்,  விபத்தினால் ஏற்படும் மரணங்களைக் குறைக்கும் வகையில், கரூர் மாவட்ட காவல் துறையினர் சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை  எடுத்து வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.
* சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.