முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

“அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக தமிழர்கள் உள்ளனர்” – மலேசிய தமிழ்ச் சங்கத்தினர் பேட்டி

மலேசிய தமிழர்களை நினைத்து கவலை கொள்ள வேண்டாம். ஆனால், உலகத் தமிழர்கள் எல்லாம் அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என சீர்காழியில் நடந்த நிகழ்ச்சியில் மலேசிய தமிழ்ச் சங்கத்தினர் கூறியுள்ளனர்.

மலேசிய தமிழ்ச் சங்கத்தினர் மற்றும் மலேசியா எழுத்தாளர் சங்கத்தினர் சார்பாக மலேசிய வாழ் தமிழர்கள் 50 க்கும் மேற்பட்டோர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பாரம்பரிய மிக்க கலாச்சார சின்னங்களை பார்வையிடுவதற்காக வந்திருந்தனர். அவர்களை சீர்காழி தமிழ்ச் சங்கத்தின் சார்பாக அதன் தலைவர் மார்கோனி தலைமையிலான நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து மரியாதை செய்து வரவேற்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்போது பேசிய மலேசிய தமிழ்ச்சங்க நிர்வாகிகள் சீர்காழி தமிழிசை மூவர் மணிமண்டபம், சட்டநாதர் கோவில் மற்றும் தமிழரின் வாழ்வியல் கலாச்சாரத்தை போற்றும் பூம்புகார் கலைக்கூடம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு தமிழர்களின் தொன்மையான வாழ்வியல் கலாச்சாரத்தை அறிந்து கொள்வதற்காக தாங்கள் வந்துள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் இலங்கையில் ஏற்பட்டது போல் மலேசிய தமிழர்களுக்கும் நெருக்கடி ஏற்படலாம் என்ற தகவல் பரவி வருவதை மறுத்த தமிழ் சங்கத்தினர், எக்காலத்திலும் மலேசியத் தமிழர்களுக்கு அந்த நிலை ஏற்படாது. அதற்கான சூழ்நிலை இன்னும் நூறு ஆண்டு காலத்திற்கு இல்லை எனவும் இனிவரும் காலங்களிலும் மலேசிய அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக தமிழர்கள் இருப்பார்கள் எனவும் தெரிவித்தனர்.

அண்மைச் செய்தி : திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சிலை திருட்டு தடுக்கப்பட்டுள்ளது – அமைச்சர் கேகர்பாபு

மற்ற நாடுகளில் உள்ள தமிழர்கள் தங்கள் அடையாளத்தை இழந்து தமிழர் என்ற பெயரை மட்டுமே கொண்டு வாழ்ந்து வருகின்றனர். ஆனால், மலேசிய தமிழர்கள் மட்டுமே தமிழர்களின், பாரம்பரியம் இசை, கல்வி கலாச்சாரம் பண்பாடு, உணவு என அனைத்தையும் இன்றளவும் பாதுகாத்து வருகிறோம். இன்னும் நூறு ஆண்டுகள் கடந்தாலும் தமிழ் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் நாங்கள் கடைபிடிப்போம் என்ற நிலையை எங்கள் முன்னோர்கள் உருவாக்கி வைத்துள்ளனர்.

ஆகவே மலேசிய தமிழர்களைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டிய நிலை இல்லை. அதே நேரம் உலகத் தமிழர்கள் அனைவரும் மலேசிய தமிழர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். தமிழகத்தில் எடுக்கப்படும் தமிழ் வளர்ச்சி சார்ந்த நடவடிக்கைகள் அனைத்தையும் மலேசிய தமிழர்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும். இதன் காரணமாக தமிழ் பண்பாடு கலாச்சாரம் மிகவும் மேம்படும். இதுவே தங்களது விருப்பம் எனவும் தெரிவித்தனர். இதனை முன்னெடுக்கும் விதமாகத்தான் கடந்த 2004ம் ஆண்டு முதல் இந்த கலாச்சார பயணத்தை மேற்கொண்டு வருகிறோம்.

இதன் மூலம் மலேசிய தமிழ் சொந்தங்கள் தமிழ கலாச்சாரம் மற்றும் பண்பாடு ஆகியவற்றை முழுமையாக தெரிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படுகிறது. எங்களை தங்களது தொப்புள் கொடி உறவாக நினைத்து வரவேற்று மரியாதை செய்த சீர்காழி தமிழ்ச் சங்கத்தினருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேறும் – ஜோ பைடன்

Jeba Arul Robinson

குறைந்தது கடன்…உயர்ந்தது வருவாய்…தமிழ்நாடு நிதியமைச்சர் மகிழ்ச்சி…

Web Editor

தமிழகத்திற்கு ரூ.1,188 கோடி ஜிஎஸ்டி நிலுவைத் தொகை விடுவிப்பு

Web Editor