24 மாவட்டங்களுக்கு புதிதாக ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ளது, இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
* 24 மாவட்டங்களுக்கு புதிதாக ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை மாவட்ட ஆட்சியராக விஜய ராணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக கவிதா ராமு, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக கோபால சுந்தர ராஜ் மற்றும் தேனி மாவட்ட ஆட்சியராக முரளிதரன் நியமனம் செய்யப்பட்டுள்ளளார்.
* நாகை ஆட்சியராக அருண் தம்புராஜ், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக ஆர்த்தி மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக ஆல்பி ஜான் வர்கீஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளளார்.
* விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக மோகன், வேலூர் மாவட்ட ஆட்சியராக குமரவேல் பாண்டியன் மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக விசாகன் நியமனம் செய்யப்பட்டுள்ளளார்.
* திருவாரூர் மாவட்ட ஆட்சியராக காயத்ரி கிருஷ்ணன், கோவை மாவட்ட ஆட்சியராக சமீரன் மற்றும் தென்காசி மாவட்ட ஆட்சியராக சந்திரலேகா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







