சமீபத்தில் வடகிழக்கு பருவமழை கொட்டித்தீர்த்து முடிந்திருந்த நிலையில், தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் சில இடங்களில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
நேற்றிரவு முதல் பெய்த மழையின் காரணமாகப் புதுச்சேரியில் பல இடங்கள் வெள்ளத்தில் மிதக்கத் தொடங்கியுள்ளன. மேலும், பெண் ஒருவர் மழை வெள்ளத்தில் சிக்கி மாயமாகியுள்ளார். அவரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், புதுச்சேரியைத் தொடர்ந்து கடலூரிலும் நேற்றிரவு முதல் மழை பெய்து வருகிறது. கடலூரில் நகர் பகுதி, நெல்லிக்குப்பம், பண்ருட்டி, விருத்தாசலம், வடலூர் மற்றும் நெய்வேலி உள்ளிட இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.
புதுவை, கடலூர் மட்டுமல்லாது விழுப்புரம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், நாளை மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.







