முக்கியச் செய்திகள் கொரோனா செய்திகள்

கொரோனா 3-வது அலையை தடுக்க தடுப்பூசியே தீர்வு!

கொரோனா மூன்றாவது அலையை தடுக்க தடுப்பூசி செலுத்திக் கொள்வதே நிரந்தர தீர்வு என மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி வளாகத்தில் உள்ள கொரோனா சிறப்பு மையத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கொரோனா வைரசை கட்டுப்படுத்த போராடி வருவதாகவும் இதன் காரணமாக கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வருவதாகவும் தெரிவித்தார். தமிழ்நாடு முழுவதும் இதுவரை ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், கொரோனா மூன்றாவது அலையை தடுக்க தடுப்பூசி செலுத்திக் கொள்வதே நிரந்தர தீர்வு எனவும் கூறினார்.

Advertisement:

Related posts

அமைச்சர் காமராஜ் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் அறிக்கை!

Niruban Chakkaaravarthi

நட்புறவை வலுப்படுத்த சீனா-வடகொரியா முடிவு!

Ezhilarasan

ஜேஇஇ முதன்மை தேர்வுகள் மீண்டும் ஒத்திவைப்பு!

Halley karthi