27 மாவட்டங்களில் கொரோனா நோய்த்தொற்று குறைந்த காரணத்தால் இன்று முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படுகிறது.
கொரோனாவின் இரண்டாம் அலை காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வந்த நிலையில் அணைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா நோய்த்தொற்று குறைந்து கொண்டே வருகிறது. இதனால் கொரோனா தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங்களில் இன்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகிறது.
இதுகுறித்து அரசு, டாஸ்மாக் கடைகளில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது,
- மதுபான சில்லறை விற்பனை கடைகளின் அனைத்து பணியாளர்களும் காலை 10.00 மணி முதல் மாலை 5 மணி வரை பணியில் இருக்க வேண்டும்.
- மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.
- மதுபான சில்லறை விற்பனைக் கடை பணியாளர்களில், உடல் தகுதி வாய்ந்த 55 வயதிற்கு கீழுள்ள அனைத்து பணியாளர்களும், பணியில் இருக்க வேண்டும்.
- மதுபான சில்லறை விற்பனை கடைகளில், கூட்டத்தை கட்டுப்படுத்த கண்டிப்பாக தடுப்புவேலி அமைக்கப்பட்டு இருக்க வேண்டும்.
- மதுபான சில்லறை விற்பனைக்கடையில் மதுபானம் வாங்க வரும் நபர்களின் கூட்டத்தை, இரண்டு பணியாளர்கள் வெளியில் இருந்து ஒழுங்குபடுத்த வேண்டும்.
- மதுபானம் வாங்க வரும் நபர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
- முகக்கவசம் இல்லாமல் மதுபானம் வாங்க வரும் நபருக்கு, கட்டாயம் மதுபானம் வழங்க கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மதுபான சில்லறை விற்பனை கடைகள் திறக்கும் பொழுதும், மூடும் பொழுதும் உட்புறமும், வெளிப்புறமும் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.
- மதுபானம் வாங்க வரும் நபருக்கு அதிகளவில் மதுபானங்களை வழங்கக் கூடாது.







