தமிழ்நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் 1,170 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மக்கள் நல்வாழ்வுத் துறை இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழ்நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் 1,170 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 26,90,633 ஆக உயர்ந்துள்ளது.

தொற்றிலிருந்து இன்று ஒரே நாளில் 1,418 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை நலமடைந்தவர்கள் எண்ணிக்கை 26,40,627 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த 20 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,948 ஆக அதிகரித்துள்ளது. தற்போது, 14,058 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டங்களைப் பொறுத்தவரை அதிகபட்சமாக சென்னையில் 148 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கோவையில் 141, செங்கல்பட்டில் 93, ஈரோட்டில் 93 பேருக்கும் தொற்று பதிவாகியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: