முக்கியச் செய்திகள் இந்தியா

2வது முறையாக தடுத்து நிறுத்தப்பட்ட ப்ரியங்கா காந்தி

காவல்நிலையத்தில் உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்தினரை காண ஆக்ரா சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் ப்ரியங்கா காந்தி போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆக்ராவை சேர்ந்த துப்புரவுத் தொழிலாளி, திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் எழுந்தது. இதனையடுத்து, உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதற்காக, ப்ரியங்கா காந்தி லக்னோவில் இருந்து புறப்பட்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஆக்ரா விரைவுச் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, பிரியங்கா காந்தி மற்றும் அவருடன் சென்ற வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த பிரியங்கா காந்தி, கட்சி அலுவலகத்தை தவிர வேறு எங்கு சென்றாலும், அரசு நிர்வாகம் தன்னை தடுத்து நிறுத்த முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டினார். இதனால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும் அவர் கூறினார்.

இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக ப்ரியங்கா காந்தி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். அண்மையில், லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்க முயன்ற ப்ரியங்கா காந்தியை உத்தரப்பிரதேச போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தொழிலாளியின் குடும்பத்தினரை சந்திக்க ப்ரியங்கா காந்தி மற்றும் அவருடன் 3 பேர் செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

குடியரசு தலைவர் தேர்தல்; திரௌபதி முர்மு முன்னிலை

G SaravanaKumar

என்னை கைது செய்யுங்கள். ஏன் காந்தி, நேரு எல்லாம் சிறைக்கு போகவில்லையா? மீரா மிதுன்

EZHILARASAN D

அதிமுகவில் சசிகலா, டி.டி.வி. தினகரன்?: ஓ.பி.எஸ்., தலைமையில் கூட்டம்

Halley Karthik