முக்கியச் செய்திகள் கொரோனா

ஒரே நாளில் 1,344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 26,76,936 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 14 பேர் உயிரிழந்தனர்.  மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 35,768 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 1,473 பேர் நேற்று ஒரே நாளில் குணமடைந்து வீடு திரும்பினர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26,23,459 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போது கொரோனா தொற்றுக்கு 16,252 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டங்களைப் பொறுத்தவரை சென்னையில் இன்று 164 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோவையில் 137, செங்கல்பட்டில் 101 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி தலைவர் வே.ஆனைமுத்து உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி!

Halley karthi

9 முதல் 12 வரை உள்ள வகுப்புகள் திறப்பு – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்

Saravana Kumar

இணையதள பக்கம் உருவாக்கிய ட்ரம்ப்!

எல்.ரேணுகாதேவி