முக்கியச் செய்திகள் இந்தியா

லகீம்பூர் வன்முறை: 11 மணி நேர விசாரணைக்குப் பிறகு மத்திய அமைச்சர் மகன் கைது

லகிம்பூரில் விவசாயிகள் மீது காரை ஏற்றிக்கொன்ற வழக்கில், மத்திய அமைச்சரின் மகன் ஆசிஷ் மிஸ்ராவை போலீசார் நேற்றிரவு கைது செய்தனர்.

உத்தரபிரதேச மாநிலம் லகீம்பூா் கெரியில் கடந்த 3-ஆம் தேதி விவசாயிகள் போராட்டம் நடைபெற்றது. அப்போது, மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ராவின் சொந்த ஊரான திகுனியாவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மாநில துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா வருவதாக இருந்தது. அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்டுவதற்காக விவசாயிகள் திகுனியா-பல்பீர்பூர் சாலையில் திரண்டனர்.

அவர்கள் மீது பா.ஜ.கவினர் கார் மோதியதில் 4 விவசாயிகள் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து நடந்த கலவரத்தில் ஒரு பத்திரிகையாளர் மற்றும் 4 பாஜவினர் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். பாஜகவினா் வந்த காா்களில் ஒன்றில், மத்திய உள்துறை இணையமைச்சா் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்த போலீசார், 2 பேரை கைது செய்தனர். மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நிலையில் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் ஆசிஸ் மிஸ்ராவை வெள்ளிக்கிழமை விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால், அவர் ஆஜராகவில்லை. இந்த விவகாரத்தை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆசிஷ் மிஸ்ராவை கைது செய்யாததற்கு கடும் கண்டனம் தெரிவித்தது

அதைத் தொடர்ந்து, நேற்று காலை லகிம்பூர் கேரி குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு ஆசிஷ் மிஸ்ரா நேரில் ஆஜாரனார். இரவு 9 மணி வரை 11 மணி நேரம் நீடித்த விசாரணையின்போது வன்முறை குறித்த கேள்விகளுக்கு ஆசிஷ் மிஸ்ரா பதிலளிக்கவில்லை என்பதாலும், விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்பதாலும் கைது செய்யப்பட்டார். இந்த தகவலை டிஐஜி உபேந்திர அகர்வால் தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

உத்தரகாண்ட் வெள்ளப் பாதிப்பு: அமைச்சர் அமித் ஷா ஆய்வு

Halley karthi

பயிர்க்கடன் தள்ளுபடியில் ரூ.516 கோடி முறைகேடு – அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றச்சாட்டு

Saravana Kumar

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: திமுக முன்னிலை

Saravana Kumar