முக்கியச் செய்திகள் தமிழகம்

ஊரக உள்ளாட்சி தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு

தமிழ்நாட்டில் 2 கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு கண்டங்களாக நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த 6-ம் தேதி நடந்து முடிந்தது.முதல் கட்ட வாக்குப்பதிவில் 77.43 % வாக்குகள் பதிவானது. இந்நிலையில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. சென்னை போரூரை அடுத்த கெருகம்பாக்கம் இந்திராநகர் பகுதியில் திமுக, அமமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. விழுப்புரத்தை அடுத்த சோழம்பூண்டி வாக்கு சாவடி மையத்தில் வேட்பாளரின் கணவர் அரிவாளால் வெட்டப்பட்டார். இதுபோன்ற அசம்பாவித நிகழ்வுகளால் வாக்குப் பதிவு நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டது.

இன்று மாலை 3 மணி நிலவரப்படி 59.41% வாக்குகள் பதிவானதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. இன்று காலை முதல் பொதுமக்கள் வரிசையில் நின்று தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர். வாக்குப்பதிவு நிறைவடைந்ததை தொடர்ந்து வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு காவல்துறையினர் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.

Advertisement:
SHARE

Related posts

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

Saravana Kumar

வேளாண், சிஏஏ சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்படும்: முதலமைச்சர்

ஆயிரம் விளக்கு தொகுதியின் அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்படும் – குஷ்பு வாக்குறுதி

Gayathri Venkatesan