முக்கியச் செய்திகள் கொரோனா

தமிழ்நாட்டில் இன்று 1,986 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழ்நாட்டில் இன்று 1,986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

மக்கள் நல்வாழ்வுத் துறை இன்று வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25,59,597 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த 26 பேர் இன்று உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்புகள் எண்ணிக்கை 34,076 ஆக உயர்ந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தமிழ்நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த 2,178 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். இதுவரை 25,04,805 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 20,716 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்ட வாரியாக கோவையில் 246, சென்னையில் 204, ஈரோட்டில் 165, தஞ்சையில் 124, செங்கல்பட்டில் 122 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது.
மற்ற மாவட்டங்களில் 100 க்கும் கீழாகவே பாதிப்பு பதிவாகியுள்ளது. சென்னையில் நேற்று 215 பேருக்கு கொரோனா தொற்று பதிவான நிலையில் இன்று சற்று குறைந்து 204 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இலங்கை தமிழர்கள் ஆதரவற்றவர்கள் அல்ல; முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

Saravana Kumar

நடிகர் விவேக் காலமானார்!

Gayathri Venkatesan

ஒரு லட்சம் முன்கள பணியாளர்களுக்கு பயிற்சி; பிரதமர் மோடி தகவல்

Halley Karthik