முக்கியச் செய்திகள் கொரோனா

தமிழ்நாட்டில் இன்று 812 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 812 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ச்சியாக குறைந்துகொண்டே வருகிறது. கடந்த பல நாட்களாக 900 க்கும் குறைவான அளவிலேயே தினசரி பாதிப்பு பதிவாகிவுள்ளது. அதுபோலவே உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மக்கள் நல்வாழ்வுத் துறை இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், ஒரே நாளில் 812 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 27,13,216 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த 8 பேர் இன்று உயிரிழந்தனர். இதனால் மொத்தம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,259 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 927 கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். நலம்பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 26,67,067 ஆக அதிகரித்துள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் 9,890 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டங்களைப் பொறுத்தவரை சென்னையில் 114, கோவையில் 108 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மற்ற அனைத்து மாவட்டங்களிலும் 100க்கும் குறைவாகவே பாதிப்பு பதிவாகியுள்ளது.சென்னையில் 112 பேரும், கோவையில் 106 பேரும் இன்று குணமடைந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram