தமிழகம் செய்திகள்

குழந்தைகளை ஊக்குவிக்க புதுமுயற்சி – பட்டமளிப்பு விழா நடத்திய பள்ளி நிர்வாகம்

செங்கல்பட்டு அருகே பள்ளிக் குழந்தைகளை ஊக்குவிக்கும் விதமாக குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து முடிக்கும் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடத்துவது வழக்கம். ஆனால் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த செய்யூரில் இயங்கி வரும் லயோலா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில், சிறு குழந்தைகளை ஊக்குவிக்கும் விதமாகவும், தொலைநோக்கு பார்வையோடு கல்வியில் உயர வழிகாட்டும் பொருட்டு, எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி படிக்கும் மழலையர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையும் படியுங்கள் : கேரளா : இருசக்கர வாகனத்தில் வந்த பள்ளி மாணவர் பேருந்திற்கு அடியில் சிக்கி உயிரிழப்பு

கலை நிகழ்ச்சிகளுடன் துவங்கிய பட்டமளிப்பு விழாவில் புதுச்சேரி மாநில பாரா ஒலிம்பிக் கமிட்டி தலைவர் சந்தோஷ் குமார் கலந்து கொண்டு, பள்ளி மழலையர்களுக்கு பட்டமளித்து வாழ்த்து தெரிவித்தார். பட்டமளிப்பு விழாவில் 48 பள்ளி குழந்தைகளுக்கு பட்டமளிக்கப்பட்டன. இறுதியாக பள்ளி மாணவர்கள் மூலம் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த பட்டமளிப்பு விழாவில் ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

– கோ. சிவசங்கரன்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ; தமிழ்நாடு சட்டமன்றத்தில் நாளை தாக்கல்..!

Web Editor

காவிரி – கோதாவரி இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்: அமைச்சர் துரைமுருகன்

Vandhana

நடிகையர் திலகம் – கீர்த்தி சுரேஷ் பிறந்த நாள் இன்று

Web Editor