மதவாதசக்திகளுக்குச் சம்மட்டி அடி கொடுத்த ஈரோடு கிழக்கு வாக்காளர்களுக்கு பாராட்டுகள் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. திமுக கூட்டணி வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவனும் அதிமுக வேட்பாளராக தென்னரசுவும் களமிறங்கினர். பிப்ரவரி 27ல் இடைத்தேர்தல் நடைபெற்றது. மக்கள் நீதி மய்யம் கட்சி காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு அளித்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை மார்ச் 2-ம் தேதி நடைபெற்றது. ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,10,556 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட தென்னரசு 43,981 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை சந்தித்தார்.
அண்மைச் செய்தி : திமுக அமைச்சர்களின் வெறுப்பு பிரச்சாரமே வதந்தி பரவக் காரணம் – அண்ணாமலை
இந்நிலையில் இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், மதவாதசக்திகளுக்குச் சம்மட்டி அடி கொடுத்த ஈரோடு கிழக்கு வாக்காளர்களுக்கும்,திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றி வீரர் ஈவிகேஎஸ். இளங்கோவனுக்கும் தோழமைக் கட்சிகளுக்கும்,தேசம் காக்க என்னோடு கைகோர்த்த மநீம சொந்தங்களுக்கும் எனது மனப்பூர்வமான பாராட்டுக்கள் என்று தெரிவித்துள்ளார்.