தமிழ்நாட்டில் புதிதாக 4,013 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் புதிதாக 4,013 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தொடர்ந்து குறைந்து வருகிறது. மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் 4,013 பேருக்கு…

தமிழ்நாட்டில் புதிதாக 4,013 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தொடர்ந்து குறைந்து வருகிறது. மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் 4,013 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 619 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 4 ஆயிரத்து 13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 லட்சத்து 92 ஆயிரத்து 420 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றில் இருந்து 4 ஆயிரத்து 724 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 24 லட்சத்து 23 ஆயிரத்து 606 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில், பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில், 115 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 32 ஆயிரத்து 933 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் புதிதாக 227 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈரோட்டில் 360 பேருக்கும் சேலத்தில் 251 பேருக்கும் கோவையில் 474 பேருக்கும் புதிதாகத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மற்றும் சென்னை தவிர மற்ற பகுதிகளில் உயிரிழப்பு 10-க்கும் குறைவாகவே உள்ளது. தஞ்சாவூரில் 26 பேரும் சென்னையில் 20 பேரும் உயிரிழந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.