முக்கியச் செய்திகள் தமிழகம்

புதிய தளர்வுகள் அமலுக்கு வந்தன: இ- பதிவு முறையிலும் மாற்றம்!

தமிழ்நாட்டில் இன்று முதல் கொரோனா ஊரடங்கில் புதிய தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு கொரோனா பரவல் நாளுக்கு நாள் தொடர்ந்து உயர்ந்துகொண்டே இருந்தது. மே மாதத்தில் நாள் ஒன்றுக்கு 30 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தொற்றைக் கட்டுப்படுத்த மே 10 முதல் இரவு நேர ஊரடங்கும், மே 24 முதல் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது.

தற்போது, கொரோனா பரவல் குறைந்து வருவதையொட்டி, ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. கொரோனா தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களைத் தவிர பிற மாவட்டங்களுக்கு தளர்வுகள் வழங்கப்பட்டன. தனியாக உள்ள மளிகை, பலசரக்கு, காய்கறி, இறைச்சி கடைகள் செயல்படலாம், காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடை பாதைக் கடைகள் செயல்படலாம், இருசக்கர வாகன பழுது நீக்கும் கடைகள், வாகன உதிரிபாக விற்பனை கடைகள் செயல்படலாம் என அனுமதி வழங்கப்பட்டது.  

அதன்படி, இன்று காலை முதல் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வந்தன.  இதையடுத்து, மளிகை, காய்கறி, இறைச்சிக் கடைகள் காலை 6 மணிக்கு திறக்கப்பட்டுள்ளன.  சுயதொழில் செய்வோர் கடைகளை திறக்கவும் வெளி இடங்களுக்கு சென்று வேலை செய்யவும் இ-பதிவு வலைத்தளத்தில் இ -பதிவு செய்யும் வகையில் இணையதளத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எலக்ட்ரீசியன், பிளம்பர், கணினி பழுது பார்ப்பவர்கள், மோட்டார் வாகனம் பழுது பார்ப்பவர்கள்,  கார்பெண்டர், வீட்டு வேலை செய்பவர்கள்,  தனியார் பாதுகாப்பு சேவை உள்ளவர்களுக்கு இ-பதிவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

Advertisement:

Related posts

சாலை பெயர் மாற்றத்தில் பாஜகவுக்கு சம்பந்தமா? எல்.முருகன் விளக்கம்!

Ezhilarasan

திமுகவால் சாதிக்கு அப்பாற்பட்டு வேட்பாளர்களை நிறுத்த முடியுமா ? – குஷ்பூ கேள்வி

Gayathri Venkatesan

வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தேர்தல் ஆணையம் ஆலோசனை!

எல்.ரேணுகாதேவி