ஓமன் திமுக சார்பாக 5 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் நன்கொடை!

ஓமன் திமுக சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 5 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. ஓமன் திமுக சார்பாக முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கும் நிகழ்ச்சி மற்றும் கருணாநிதியின்…

ஓமன் திமுக சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 5 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

ஓமன் திமுக சார்பாக முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கும் நிகழ்ச்சி மற்றும் கருணாநிதியின் 98வது பிறந்தநாள் நிகழ்ச்சி காணொலி வாயிலாக நடைபெற்றது. ஓமன் திமுகவின் செயலாளர் பி.கே.சிவகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மஸ்தான், திமுகவின் வெளிநாடு வாழ் தமிழர் நல அணியின் செயலாளர் டி.ஆர்.பி. ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், ஒமன் திமுக சார்பாக 5 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.