முக்கியச் செய்திகள் தமிழகம்

“சட்டப்பேரவையில் கருணாநிதி படம் திறக்கப்படும் நாள் தமிழ்நாடு பெருமை கொள்ளும் நாள்” – கனிமொழி

சட்டப்பேரவையில் கருணாநிதி படம் திறக்கப்படும் நாள் தமிழ்நாடு பெருமை கொள்ளும் நாள் என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா காலகட்டத்தில் மருத்துவமனைகளுக்கு செல்வதில் பொதுமக்களில் பலருக்கும் தயக்கம் இருப்பதால் விரைவில் வரவுள்ள ‘மக்களை தேடி மருத்துவம்’ என்ற திட்டம் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக அமையும் என தெரிவித்தார். திமுக முன்னெடுத்த தொடர் போராட்டத்திற்கு கிடைத்த முதற்கட்ட வெற்றிதான், மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கான 27% இட ஒதுக்கீடு என கூறிய கனிமொழி, இது முழுமையான வெற்றியல்ல என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய கனிமொழி, நாடாளுமன்றத்தில் பெகாசஸ் போன்ற முக்கிய விவகாரம் குறித்து பேச மத்திய அரசு விரும்பவில்லை என தெரிவித்தார். மேலும் தன் வாழ்நாளில் தேர்தலில் தோல்வியையே பார்க்காத தலைவர் கருணாநிதி என்றும், சட்டமன்ற வளாகத்தில் அவருடைய படம் திறக்கப்படும் நாள் தமிழகம் பெருமை கொள்ளும் நாள்.

Advertisement:
SHARE

Related posts

கேட்ஸ் அறக்கட்டளை பொறுப்புகளில் இருந்து விலகுகிறார் பில் கேட்ஸின் மனைவி மெலின்டா

Ezhilarasan

திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போய்விடும்: முதல்வர்!

Saravana Kumar

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை விதிப்பது ஏற்புடையதல்ல

Saravana Kumar