சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படத்திறப்பு நிகழ்ச்சியையொட்டி, தலைமைச் செயலகம் மற்றும் கடற்கரை சாலை முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் படத்திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று சென்னை வருகிறார். இதனையொட்டி, சென்னை காமராஜர் சாலையில், போர் நினைவுச் சின்னம் முதல் தலைமைச் செயலகம் வரை, சாலையின் இருபுறங்களும் வண்ண மின்விளக்குகளால் நேற்று அலங்கரிக்கப்பட்டிருந்தன.

விழாக்கோலம் பூண்டுள்ள தலைமைச் செயலகம் முன், வாகனங்களை நிறுத்திவிட்டு பொதுமக்களும் திமுக தொண்டர்களும் புகைப்படம் எடுத்தனர். இதேபோல், விடுமுறை தினத்தையொட்டி கடற்கரைக்கு சென்ற பெரும்பாலானோர் ஆர்வமுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.







