முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

கருப்பு பூஞ்சை நோய்: அரசு தீவிரமாக செயல்பட டிடிவி தினகரன் கோரிக்கை!

கருப்பு பூஞ்சை நோயைக் கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு இன்னும் தீவிரமாக செயல்பட வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் அலுவலகத்துக்கு டேக் செய்து, ட்விட்டரில் அவர் கூறியிருப்பதாவது: கொரோனாவைத் தொடர்ந்து கருப்பு பூஞ்சை நோய் அச்சுறுத்தி வரும் நிலையில், அதற்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான அளவு மருந்தினை மத்திய அரசிடம் இருந்து பெறுவதற்கு தமிழக அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்நோயினால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டிருப்போரின் எண்ணிக்கையை வைத்து பார்க்கும்போது, கையிருப்பில் உள்ள மருந்து போதுமானதாக இல்லை என்ற செய்தி கவலை அளிக்கிறது. எனவே, கருப்பு பூஞ்சை நோயினைக் கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு இன்னும் தீவிரமாக செயல்பட வேண்டியது அவசியம்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இருந்து கருப்பு பூஞ்சையைக் கண்டறிதல், அதனால் பாதிக்கப்பட்டோருக்கு தாமதமின்றி சிகிச்சை அளித்தல் ஆகியவற்றுக்கு மாவட்டம்தோறும் தனி ஏற்பாடுகளை செய்திட வேண்டும்.


மேலும் கருப்பு பூஞ்சை நோய்க்கு அரசு கூட்டுறவு மருந்தகத்தில் மருந்தாளுநராக பணியாற்றிய பெண் ஒருவரே முதல் பலியாகி இருப்பதால், அம்மா மருந்தகங்கள் மற்றும் கூட்டுறவு மருந்தகங்களில் பணிபுரியும் மருந்தாளுநர்களையும் கொரோனா தடுப்பு முன்களப் பணியாளர்களாக தமிழக அரசு அறிவித்திட வேண்டும்.

இது மட்டுமின்றி, கொரோனாவால் உயிரிழந்த முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடுகளை, கொரோனாவின் தொடர்ச்சியாக வரும் கருப்பு பூஞ்சை நோய்க்கு பலியாகும் முன்களப் பணியாளர்களுக்கும் தமிழக அரசு வழங்கிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement:

Related posts

குறை சொல்ல முடியாத அளவிற்கு எனது அரசியல் வாழ்க்கை அமைந்துள்ளது – செல்லூர் ராஜூ

Saravana Kumar

தங்க மாத்திரைகளை வயிற்றுக்குள் வைத்து கடத்திவந்தவர் கைது!

Jeba

நடிகர் டேனியல் குறித்து அவதூறு கருத்து பரப்புவோர் மீது நடவடிக்கை!

எல்.ரேணுகாதேவி