முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

வத்தலக்குண்டு அருகே கார்கள் மோதல்: உயிர் தப்பினார் எம்.எல்.ஏ!

வத்தலக்குண்டு அருகே கார்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில், ஆண்டிப்பட்டி திமுக எம்.எல்.ஏ மகாராஜன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் பணி நிமித்தமாக திண்டுக்கல்லுக்கு பயணம் மேற்கொண்டார். அவர் சென்ற கார் வத்தலக்குண்டு அருகே புறவழிச் சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது சாலையின் குறுக்கே வாழைத்தார் ஏற்றிவந்த மினி லாரி மீது, தேனியில் இருந்து வந்த கார் ஒன்று மோதியது. இதையடுத்து அந்த காரின் பின்னே வந்த எம்.எல்.ஏ மகாராஜனின் காரும் அடுத்தடுத்து மோதிக்கொண்டது. இந்த விபத்தில் திமுக எம்.எல்.ஏ மகராஜன் காயமின்றி உயிர் தப்பினார்.

காரில் வந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த விபத்தில் வாழைத்தார் ஏற்றி வந்த மினி லாரியில் பயணம் செய்த ஐந்து பெண் தொழிலாளர்கள், காயமடைந்தனர். அவர்களை மீட்ட எம்.எல்.ஏ மகாராஜன், வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். இதனைத் தொடர்ந்து மகாராஜன் பயணத்தைத் தொடராமல் மற்றொரு காரில் மீண்டும் ஆண்டிபட்டிக்குத் திரும்பிச் சென்றார். விபத்து தொடர்பாக வத்தலக்குண்டு போலீசார் வழக்கு பதிவி விசாரித்து வருகின்றனர்.

Advertisement:
SHARE

Related posts

கல்வி உதவித்தொகை திட்டம்: பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்!

Jeba Arul Robinson

தமிழ்நாட்டில் புதிதாக 4,230 பேருக்கு கொரோனா தொற்று

Gayathri Venkatesan

ஒலிம்பியாவில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால காளை சிலை!

Niruban Chakkaaravarthi