உயர்கல்வி நிறுவனங்களில் 10.5% இட ஒதுக்கீடு : தமிழக அரசு உத்தரவு!

வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீட்டை வழங்க அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10.5% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டம் 15 வது…

வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீட்டை வழங்க அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10.5% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டம் 15 வது சட்டப்பேரவையின் கடைசி கூட்டத்தொடரில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20% இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீட்டை அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும் என்றும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இந்த இட ஒதுக்கீட்டைத் தொடர வேண்டும் என்றும் உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மாணவர் சேர்க்கை, புதிய பேராசியர் நியமனம் மற்றும் பணியாளர் நியமனத்தில் உள் இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என்றும், சீர்மரபினருக்கான இட ஒதுக்கீட்டையும் கடைபிடிக்க வேண்டும் என்றும் உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் 10.5 சதவீத உள் ஒதுக்கீடு உடனடியாக அமலுக்கு வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.