தேர்தல் ஆணையத்தின் தடையை எதிர்த்து இன்று கொல்கத்தாவில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தேர்தல் பரப்புரையின் போது விதிகளுக்கு மாறாக அவதூறு பரப்பும் வகையில் பேசியதாக கூறி இன்று மதியம் 12 மணிவரை தேர்தல் ஆணையம் பரப்புரை மேற்கொள்ள தடைவிதித்திருக்கிறது.
மமதா பானர்ஜி கடந்த மார்ச் 28 மற்றும் கடந்த 7 ஆம் தேதி இரண்டு இடங்களில் நடைபெற்ற பரப்புரையில், மத்திய ஆயுதப்படை போலீசாருக்கு எதிராக பேசியதற்கு விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீசுக்கு பதில் அளித்த மமதா பானர்ஜி, தேர்தல் ஆணையம் எத்தனை நோட்டீஸ் அனுப்பினாலும், என்னுடைய பதில் ஒன்றே ஒன்றுதான் என்று குறிப்பிட்டு இருந்த அவர், தான் மதரீதியாக பிளவு படுத்தும் வகையில் எப்போதுமே பேசுவதில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதன் பின்னர்தான் இப்போது மமதாவுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்திருக்கிறது. இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் தடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தனது டிவிட்டரில் கருத்துகளை பதிவிட்டுள்ள மமதா பானர்ஜி, தனக்கு பரப்புரை மேற்கொள்ள தடைவிதித்திருப்பது அரசியல் சட்டவிதிமுகளுக்கு மாறானது என்று கூறி உள்ளார். தனது தடையை கண்டித்து கொல்கத்தாவில் உள்ள காந்தி மூர்த்தியில் இன்று நண்பகல் 12 மணிக்கு தர்ணாவில் ஈடுபட உள்ளதாக கூறி உள்ளார்.