பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை ஏற்றம் தொடர்பாக சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தேமுதிக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், தேமுதிக பொருளாளர் பிரேமலதா உள்ளிட்டோர் கலந்துகொண்டு கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஆட்டோ மற்றும் டேக்ஸி ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. உலகிலேயே பெட்ரோல், டீசல் அதிகமான விலைக்கு விற்பதில் இந்தியா தான் முதலிடம் வகிக்கிறது, இதை நாங்கள் கண்டிக்கிறோம் என்று தெரிவித்தார்.
ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்திய பிரேமலதா, தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவி வருகிறது எனவும், மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதை கண்டிக்கிறோம் என்றும் கூறினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: