ஊரடங்கையொட்டி தமிழகத்தில் செயல்படும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வருவதால் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில், ஊரடங்கையொட்டி தமிழக அரசு சலுகைகள் அறிவித்துள்ளது.
அதில், ஆட்டோரிக்ஷா, டாக்சிகளுக்கான சாலைவரி கட்டணங்கள் 3 மாதத்திற்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் நிறுவனங்கள் கடன் உதவி பெறும் போது செலுத்த வேண்டிய முத்திரை தாள் பதிவுக் கட்டணம் செலுத்துவதற்கு டிசம்பர் மாதம் வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிட்கோ மனைகள் FAST TRACK அடிப்படையில் தொடர்ந்து ஒதுக்கீடு செய்யப்படும் எனத் கூறப்பட்டுள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு முதலீட்டு மானியம் வழங்க ரூ.280 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







