திமுக அரசு முதல் நாளில் ஐந்து அறிவிப்புகள் வெளியிட்டுள்ளதை வரவேற்பதாக சட்டமன்ற உறுப்பினரும் பாமக தலைவருமான ஜிகே மணி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் எம்.எல்.ஏவாக பதவியேற்ற பின் பாமக தலைவர் ஜிகே மணி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், சட்டமன்ற பேரவைக்கு அனுப்பி வைத்த மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி. புதிய அரசு. முதல் நாளில் 5 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளதை வரவேற்கிறோம். சட்டப்பேரவையில் பாமக பொறுப்புள்ள கட்சியாக செயல்படும். திமுக அரசு மக்களுக்கு நன்மை செய்யும்போது வரவேற்போம்.
நாங்கள் 20 இடங்களில் வெற்றி பெறுவோம் என எதிர்பார்த்தோம், ஆனால் ஐந்து இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது ஏமாற்றம் அளிக்கிறது. பாமக, அதிமுக கூட்டணி தோல்விக்கு வன்னியர் உள்ஒதுக்கீடு காரணம் அல்ல என்றார்.







