தமிழ்நாட்டில் இன்று 1969 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தினசரி பாதிப்பு 2,000 என்ற அளவில் நீடித்து வருகிறது. தொற்று மேலும் பரவாமல் தடுக்க வரும் 23ஆம் தேதி வரை மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மக்கள் நல்வாழ்வுத் துறை இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,969 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25,73,352 ஆக உயர்ந்துள்ளது.
மாநிலம் முழுவதும் இன்று ஒரே நாளில் 29 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 34,289 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த 1,839 பேர் இன்று டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுவரை நலம்பெற்றவர்களின் எண்ணிக்கை 25,18,777 ஆக உயர்ந்தது. தமிழ்நாடு முழுவதும் தற்போது 20,286 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
சென்னையில் நேற்று 189 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் இன்று சற்று அதிகரித்து 194 பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. மாவட்ட வாரியாக அதிகபட்சமாக கோவையில் 223 பேருக்கு பாதிப்பு பதிவாகியுள்ளது. ஈரோட்டில் 198, செங்கல்பட்டில் 115, தஞ்சையில் 110 பேருக்கு இன்று தொற்று உறுதியாகியுள்ளது. மற்ற மாவட்டங்களில் 100 கீழாகவே பாதிப்பு பதிவாகியுள்ளது.







