தொலைதூர கல்வி மூலம் சட்டப்படிப்புகளை வழங்குவது செல்லுமா? – 13ம் தேதி தீர்ப்பு

தொலைதூர கல்வி மூலம் சட்டப்படிப்புகளை வழங்குவது செல்லுமா, செல்லாதா என்பது குறித்து வரும் 13ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழகம் சட்டப்படிப்புகளை தொலைதூர கல்வி மூலம் வழங்குவதற்கு…

தொலைதூர கல்வி மூலம் சட்டப்படிப்புகளை வழங்குவது செல்லுமா, செல்லாதா என்பது குறித்து வரும் 13ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அண்ணாமலை பல்கலைக்கழகம் சட்டப்படிப்புகளை தொலைதூர கல்வி மூலம் வழங்குவதற்கு தடை விதிக்கக்கோரி வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அண்ணாமலை பல்கலைக்கழகம்

அப்போது, தொலைதூர கல்வியில் சட்டப்படிப்புக்கான வகுப்புகளை நடத்த அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு உரிமையோ, அதிகாரமோ இல்லை என இந்திய பார் கவுன்சில் வாதிடப்பட்டது. மேலும், தொலைதூர கல்வி மூலம் சட்டப்படிப்பை வழங்க எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என பல்கலைக்கழக மானியக்குழு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், தொலைதூர கல்வி மூலம் சட்டப்படிப்புகளை வழங்குவது செல்லுமா? செல்லாதா? என வரும் 13ம் தேதி மாலை தீர்ப்பளிப்பதாக தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.