கொரோனா வைரஸ்: தமிழகத்தில் கடந்த ஒரே நாளில் 232 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஒரே நாளில் 28,978 பேருக்குப் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் மொத்த…

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஒரே நாளில் 28,978 பேருக்குப் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,09,237 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 2,37,03,499 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இன்றைய தினத்தில் கொரோனா சிகிச்சை முடிந்து 20,904 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் இதுவரை கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை 12,40,968 ஆக உள்ளது. கடந்த ஒரே நாளில் 232 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,880 ஆக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது 1,52,389 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் மட்டும் கடந்த ஒரே நாளில் 7,149 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.