சட்டமன்றத் தொடர் நடக்கும் அரங்கில் ஜெயலலிதா புகைப்படம்!

சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெறும் கலைவாணர் அரங்கில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்துள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்…

சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெறும் கலைவாணர் அரங்கில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்துள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப் பேற்றுள்ளார். அவர் பொறுப்பேற்ற பின், முதலாவது சட்டமன்ற கூட்டத் தொடர் கலைவாணர் அரங்கில் நாளை தொடங்குகிறது.

இதில், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படுகிறது. இதையொட்டி, கலைவாணர் அரங்கில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படம் கலைவாணர் அரங்கில் வைக்கப்பட்டுள்ளது.

அந்தப் புகைப்படத்தில் அமைதி, வளம், வளர்ச்சி என்ற வாசகங்கள் இடம் பெற்றுள் ளன. தமிழகத்தில் மிளிர்ந்து வரும் அரசியல் மாண்புகளுக்கு இது ஓர் உதாரணமாகக் கருதப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.