காங்கிரஸ் கட்சிக்கு தன்மானம், சுய கெளரவம் முக்கியம்: கே.எஸ்.அழகிரி

திமுக அளிப்பதாக சொல்லும் தொகுதிகளின் எண்ணிக்கைக்கும், தாங்கள் கேட்கும் தொகுதிகளின் எண்ணிக்கைக்கும் இடையே, மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் இருப்பதாக காங்கிரஸ் கட்சி செயற்குழு கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்ணீர் மல்க…

திமுக அளிப்பதாக சொல்லும் தொகுதிகளின் எண்ணிக்கைக்கும், தாங்கள் கேட்கும் தொகுதிகளின் எண்ணிக்கைக்கும் இடையே, மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் இருப்பதாக காங்கிரஸ் கட்சி செயற்குழு கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்ணீர் மல்க பேசியுள்ளார்.

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் இடம் பெற்றுள்ள, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுடன், தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியுடனான தொகுதி பங்கீட்டில், இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில், சென்னை சத்தியமூர்த்தி பவனில், காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், கே எஸ் அழகிரி உருக்கத்துடன் பேசியதாக, தகவல் வெளியாகி உள்ளது. திமுக அளிப்பதாக சொல்லும் தொகுதிகளின் எண்ணிக்கைக்கும், தாங்கள் கேட்கும் தொகுதிகளின் எண்ணிக்கைக்கும் இடையே, மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் இருப்பதாக கே.எஸ்.அழகிரி கண்ணீர் மல்க பேசியதாக கூறப்படுகிறது.

இந்த முறை விட்டுக்கொடுக்கலாம் என்றாலும் கூட, காங்கிரஸ் கட்சிக்கு தன்மானம், சுய கெளரவம் முக்கியம் என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்காக கூட்டணி உடைந்து விட்டதாக தான் கூறவில்லை என்றும், அதிக தொகுதிகளை கேட்டுப் பெறுவோம் என்ற நம்பிக்கை இருப்பதாகவும், கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ் அழகிரி, தொகுதி பங்கீடு தொடர்பாக, இன்று திமுகவுடன் பேச்சுவார்த்தை நடைபெறாது என்றும், விரைவில், அதற்கான பேச்சுவார்தை நடைபெறும், என்றும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.