தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனத்திற்கு புதிய தலைவராக குறிஞ்சி என்.சிவகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனம், கடந்த 2007ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. இந்நிறுவனம், கேபிள் டிவி ஆப்பரேட்டர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டும், குறைந்த கட்டணத்தில் நிறைந்த சேவைகளைப் பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கத்துடனும் செயல்பட்டு வருகிறது.
கடந்த மார்ச் மாதம் 12ஆம் தேதி முதல், தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவர் பதவி காலியாக இருந்தது. தற்போது, ஈரோட்டைச் சேர்ந்த குறிஞ்சி சிவகுமாரை தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனத்திற்கு தலைவராக நியமனம் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உத்தரவிட்டுள்ளார்.







