ரூ.96,000 மதிப்புள்ள ‘ஏசி’ ரூ.5,900க்கு விற்பனை; குவிந்த வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றம்

அமேசான் நிறுவனம் இந்தியாவில் ரூ.96,000 மதிப்புள்ள ஏசியை ரூ.5,900-க்கு விற்பனை என அறிவித்து அனைவரையும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியது. அமேசான் இந்தியா நிறுவனம் ரூ.96,000 மதிப்புள்ள டோஷிபா 2021 ஏசியை ரூ.5,900 தள்ளுபடியை வழங்கி ரூ.90,800க்கு…

அமேசான் நிறுவனம் இந்தியாவில் ரூ.96,000 மதிப்புள்ள ஏசியை ரூ.5,900-க்கு விற்பனை என அறிவித்து அனைவரையும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியது.

அமேசான் இந்தியா நிறுவனம் ரூ.96,000 மதிப்புள்ள டோஷிபா 2021 ஏசியை ரூ.5,900 தள்ளுபடியை வழங்கி ரூ.90,800க்கு விற்கவிருந்தது. ஆனால், ரூ.5900 தள்ளுபடி என பதிவிடாமல், ரூ.5,900க்கு விற்பனை என தவறாக பதிவிட்டு ஆன்லைனில் பட்டியலிட்டது. இதனை கண்ட வாடிக்கையாளர்கள், ”94% தள்ளுபடியா? விலை இவ்வளவு குறைவா?” என பலரும் முன்பதிவு செய்தனர்.

இதன் பின் செய்த தவறை உணர்ந்த அமேசான் நிறுவனம், தனது தவறை ஒப்புக்கொண்டு, ஏசியின் விலையை திருத்தி மீண்டும் ரூ.90,800-க்கு விற்பனை என அறிவித்தது. இதனால், முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் பலரும் அதிர்ச்சியும், வருத்ததிற்க்கும் உள்ளாகினர். ரூ.5,900-க்கு ஏசியை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள், முன்பதிவு செய்யப்பட்ட விலையில் பொருளைப் பெறுவார்களா என்பது குறித்து அமேசான் நிறுவனம் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.