தமிழகத்திற்குள் பாஜக நுழைந்துவிட்டதாகவும், பாஜகவின் அபரிமிதமான வளர்ச்சியை சிலரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றும் அக்கட்சி மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் பாஜகவினருக்கு எதிரான நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்களை கண்டித்தும் முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு கண்டனம் தெரிவித்தும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய பாஜக மாநில தலைவர் எல்.முருகன், தமிழகத்திற்குள் பாஜக நுழைந்துவிட்டதாகவும் பாஜக எம்எல்ஏக்கள் 4 பேர் சட்டப்பேரவைக்குள் நுழைய உள்ளதாகவும் தெரிவித்தார். மேற்கு வங்கத்தில் பயங்கரவாத செயலில் மம்தா அரசு ஈடுபட்டுள்ளதாகவும் மாநிலத்தை அவர் கலவர பூமியாக மாற்றியிருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.







