உதவிகள் கேட்டும் கிடைக்காததால், பிரபல நடிகையின் சகோதரர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழில், பொய் சொல்லப் போறோம், ஏகன், கோவா, பலே பாண்டியா, கோ, சட்டம் ஒரு இருட்டறை உட்பட சில படங்களில் நடித்தவர் பியா பாஜ்பாய்.
தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்துள்ள பியா பாஜ்பாய், உத்தரபிரதேச மாநி லம் ஃபருகாபாத்தில் இருப்பதாகவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தனது சகோதரருக்கு வெண்டிலேட்டருடன் கூடிய படுக்கை தேவை என்றும் அவர் இறந்து கொண்டிருக்கிறார், தயவு செய்து உதவுங்கள் என்றும் நெட்டிசன்களிடம் உருக்கமாகக் கேட்டிருந்தார்.
ஆனால், அவர் எதிர்பார்த்த உதவி கிடைக்காததை அடுத்து அவர் உயிரிழந்துவிட்டார். இதை சமூக வலைதளப்பக்கத்தில் நடிகை பியா பாஜ்பாய் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவருக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா 2 வது அலை அதிகரித்து வருகிறது. பல நடிகர், நடிகைகளும் அவர்கள் குடும்பத்தினரும் இந்த தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
Advertisement: