முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள் சினிமா

குடும்பத்தினரை அடுத்து நடிகை தீபிகா படுகோனுக்கும் கொரோனா உறுதி

குடும்பத்தினரை அடுத்து நடிகை தீபிகா படுகோனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா 2 வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் உயிரிழப்போர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் தொற்று பரவல் உயர்ந்து வருகிறது. இந்த தொற்றுக்கு பிரபலங்களும் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்நிலையில் நடிகை தீபிகா படுகோனும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

பிரபல நடிகை தீபிகா படுகோன், தற்போது பெங்களுரில் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன், இவருடைய தந்தையும் முன்னாள் பேட்மின்டன் வீரருமான பிரகாஷ் படுகோன், அம்மா உஜ்ஜாலா, சகோதரி அனிஷா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, பிரகாஷ் படுகோன் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இன்னும் ஓரிரு நாளில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது. தீபிகாவின் அம்மா உஜ்ஜாலா, சகோதரி அனிஷா, வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை தீபிகா படுகோனுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், தமது உடல் நிலைபற்றி தீபிகா படுகோன் எந்தவித தகவலையும் தெரிவிக்கவில்லை.

Advertisement:
SHARE

Related posts

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் எப்போது நிரந்தர தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும்? – உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

Saravana

நீட் குறித்து பொதுமக்கள் கருத்துகளை அனுப்பலாம்: ஏ.கே.ராஜன் குழு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: பரப்புரை ஓய்ந்தது

Arivazhagan CM